ஹட்டன் கல்வி வலய அலுவலகம் இடமாற்றம்! நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த இராதாகிருஷ்ணன்
ஹட்டன் கல்வி வலய அலுவலகத்தை 67 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை கினிகத்தேனை அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கை முற்றிலும் தவறானது என நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஹட்டன் கல்வி வலயத்தின் கீழ் பெரும்பாலான பாடசாலைகள் தமிழ் மொழிமூல பாடசாலைகளாக உள்ளதால், கல்வி வலய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தினார்.
குப்பைப் பிரச்சினை
ஹட்டன் கல்வி வலயத்தின் கீழ் சுமார் 150 பாடசாலைகள் காணப்படுவதாகவும், அவற்றில் 130 பாடசாலைகள் பெருந்தோட்டப் பாடசாலைகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த கல்வி வலயத்தில் சுமார் 43,016 மாணவர்கள், 105 அதிபர்கள் மற்றும் 2,240 ஆசிரியர்கள் உள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, ஹட்டன் நகரில் நீண்டகாலமாக நிலவி வரும் குப்பைப் பிரச்சினைக்கும் மாற்றுத் தீர்வொன்றை அவர் முன்வைத்தார்.

ஹட்டனில் தற்போது குப்பைகள் கொட்டப்படும் முன்னாள் வாடிவீடு மற்றும் ஓய்வு விடுதி அமைந்திருந்த பகுதியை சுத்தப்படுத்தி, அந்த இடத்தில் ஹட்டன் கல்வி அலுவலகத்தை அமைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
அந்த இடத்தில் கல்வி அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், குப்பைகளைக் கொட்டுவதற்கான மாற்று இடத்தைத் தெரிவு செய்வதற்கு தாம் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மஞ்சுளா சுரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் நாடாளுமன்றத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,
[
மீண்டும் திறக்க கோரிக்கை
இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கொட்டகலை மூடப்பட்ட பாதையை மீண்டும் திறக்க கோரிக்கை இதேவேளை, கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த பாதையொன்று யுத்த காலத்தில் மூடப்பட்ட போதிலும், இதுவரை மீண்டும் திறக்கப்படவில்லை என இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக மூடப்பட்ட நாட்டின் பல பாதைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், கொட்டகலை பாதை மாத்திரம் இதுவரை திறக்கப்படாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைவரும் ஒன்றிணைந்து வாழ்ந்து வருவதாகவும், நாட்டில் யுத்தம் இல்லாத நிலையில், குறித்த பாதையை மீண்டும் திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சவுதி அரேபியாவில் சிக்கியுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவை மீட்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
நாமலுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு! ஜானகி சிறிவர்தனவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam