கிளிநொச்சியில் கொட்டி தீர்க்கும் மழை! வான்பாயும் குளங்கள்: பொது மக்களுக்கு எச்சரிக்கை(Photos)
கிளிநொச்சி மாவட்டத்திலும் கனத்த மழை காரணமாக கனகாம்பிகைக்குளம், வன்னெரிக்குளம் ஆகிய குளங்களின் வான் மட்டத்தை அடைந்து வான்பாய்ந்து வருகின்றதாக தெரியவருகின்றது.
கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக கனகாம்பிகைக்குளம் வான்பாய ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் பெய்த பலத்த மழை காரணமாக வன்னேரிக்குளம் இன்று வான்பாய ஆரம்பித்துள்ளது.
தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
இன்று காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான நீர்பாசன குளமான 36 அடி அடைவுமட்டம் கொண்ட இரணைமடு குளம் 24 அடி இரண்டு அங்குலமாக உயர்ந்துள்ளது.
26 அடி அடைவுமட்டம் கொண்ட கல்மடு குளம் 24 அடி மூன்று அங்குலமாகவும், 12 அடி அடைவுமட்டம் கொண்ட பிரமந்தனாறு குளம் 9 அடி ஒரு அங்குலமாகவும் அதிகரித்துள்ளது. 19 அடி அடைவுமட்டம் கொண்ட புதுமுறிப்பு குளம் 17 அடி ஐந்து அங்குலமாகவும், 25 அடி அடைவுமட்டம் கொண்ட அக்கராயன் குளம் 18 அடி மூன்று அங்குலமாகவும், 10 அடி அடைவுமட்டம் கொண்ட கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 8 அங்குலமாகவும், 8 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட குடமுருட்டி குளம் 6 அடி ஒன்பது அங்குலமாகவும் உயர்ந்துள்ளது.
இதேவேளை, 10 அடி ஆறு அங்குலம் கொள்ளவு கொண்ட கனகாம்பிகைக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 5 புள்ளி ஐந்து அங்குலம் வான் பாய்ந்து வருவதுடன், 9 அடி ஆறு அங்குலம் அடைவுமட்டம் கொண்ட வன்னேரிக்குளம் அடைவுமட்டத்தை அடைந்து 3 அங்குலம் வான் பாய்ந்து வருகின்றது.
நீர் நிலைகளிற்கான நீர்வருகை தொடர்ந்தும் காணப்படுவதாலும், மாவட்டத்திற்கு மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் தொடர்ந்தும் இருப்பது தொடர்பில் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ள நிலையில் மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நீர்நிலைகள், நீர்வடிந்தோடும் பகுதிகளிற்கு செல்வதை தவிர்க்குமாறும், தாழ்நில பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இடர் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர் ஊடாக அல்லது, பாதுகாப்பு தரப்பினர் ஊடாக பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளுமாறும், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அரச அதிபரின் நடவடிக்கையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட மக்கள் பாலத்தின் வழி பயணம்
கிளிநொச்சி - ஊற்றுப்புலம், நாவலர் பண்ணை கிராம மக்கள் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற கன மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் உயர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதை அடுத்து மாவட்ட அரசாங்க அதிபரால் இரவோடு இரவாக போக்குவரத்து செய்யக்கூடியவாறு ஏற்பாடுகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
நாவலர் பண்ணை கிராமத்தில் வசிக்கின்ற மக்கள் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற கன மழை காரணமாக தற்போது ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்ற பாலத்தின் ஊடான போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.
பாலத்தின் புனரமைப்பு காரணமாக அதற்கு மாற்று வழியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வழியும், புதுமுறிப்பு குளத்தின் நீர் மட்டம் உயர்ந்த காரணத்தினால் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்படது.
இந்த நிலையில் குறித்த விடயம் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டுவரப்பட்டதனை தொடர்ந்து நேரடியாக சம்பவ இடத்திற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளாருடன் நேற்று (08) விஜயம் மேற்கொண்ட கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் றூபவதி கேதீஸ்வரன் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விடுத்த பணிப்புரைக்கு அமைவாக குறித்த பாலத்தின் வழியாக பொது மக்கள் போக்குவரத்து செய்ய கூடியவாறு இரவோடு இரவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறித்த கிராம மக்கள் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுடனாக போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
