ரஷ்ய மக்களை ஈர்க்கும் இந்திய திரைப்படங்கள்! புடின் புகழாரம்
இந்திய திரைப்படங்களை ரஷ்ய மக்கள் அதிகம் விரும்புவதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய திரைப்படங்களுக்கு என்று தனியாக தொலைக்காட்சி அலைவரிசை ரஷ்யாவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய திரைப்படங்கள்
இந்திய திரைப்படங்கள் குறித்து புடின் கருத்து தெரிவிப்பது இது முதல் முறையல்ல.
“We love Indian cinema. Actually, Russia is probably the only country in the world that has a separate TV channel just for Indian movies,” says Russian President Vladimir Putin pic.twitter.com/u4JKss3tBX
— Shashank Mattoo (@MattooShashank) October 3, 2025
கடந்த வருடம் ஒக்டோபரில் இடம்பெற்ற BRICS நாடுகளின் கூட்டமொன்றில், இந்திய திரைப்படங்கள் தான் ரஷ்யாவில் மிகவும் பிரபலம் என அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



