கொழும்பில் போக்குவரத்து பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்.. முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய திட்டம்
கொழும்பில் போக்குவரத்தை கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள கிட்டத்தட்ட 130 பாதுகாப்பு கெமராக்களில், பல்வேறு கோளாறுகள் காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட கெமராக்கள் செயலிழந்து விட்டதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் நெருக்கமான கண்காணிப்புப் பிரிவால் கண்காணிக்கப்படும் இந்த கெமராக்கள், முறையாகப் பராமரிக்கப்படாததாலும், நவீன கெமராக்கள் பொருத்தப்படாததாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பிற்காக வீதிகளில் இந்த கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், இவை மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களைக் கண்டறிந்து அந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் திட்டம் அண்மையில் செயல்படுத்தப்பட்டது.
பதிய திட்டம்
அதன்படி, போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு பணியகத்திற்கு பொறுப்பான துணைப் பொலிஸ் அதிகாரி டபிள்யூ.பி.ஜே. சேனாதீர, தற்போது கொழும்பில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஐந்து கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கொழும்பில் கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு வான்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த கெமராக்களுக்கு மேலதிகமாக, கொழும்பில் சுமார் நானூறு கெமராக்களை நிறுவும் திட்டம் தற்போது நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இது கொழும்பில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்துவதோடு, தவறு செய்யும் ஓட்டுநர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan