மின்சார வாகன விற்பனையில் எலான் மஸ்க்கின் டெஸ்லாவை பின்னுக்குத் தள்ளிய சீனா
உலகில் மின்சார வாகன (EV) விற்பனையில் எலான் மஸ்க்கின் டெஸ்லாவை (Tesla) பின்னுக்குத் தள்ளி, சீனாவின் BYD நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
வருடாந்திர விற்பனையில் டெஸ்லாவை BYD முந்துவது இதுவே முதல் முறையாகும். 2025 ஆம் ஆண்டில் டெஸ்லாவின் விற்பனை சுமார் 9 வீதம் சரிந்து 1.64 மில்லியன் வாகனங்களாகக் குறைந்த நிலையில், BYD நிறுவனம் தனது பேட்டரி மூலம் இயங்கும் கார் விற்பனையில் 28 வீதம் வளர்ச்சியைப் பதிவு செய்து 2.25 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம், மின்சார வாகனங்களுக்காக வழங்கி வந்த 7,500 டொலர் மானியத்தை இரத்து செய்தமை டெஸ்லாவின் விற்பனை வீழ்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
விற்பனை வீழ்ச்சி
அதேசமயம், BYD நிறுவனம் தனது வாகனங்களைச் சர்வதேச சந்தையில் குறைந்த விலையில் விற்பனை செய்ததன் மூலம் லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் தனது செல்வாக்கை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

குறிப்பாக, பிரித்தானியாவில் அதன் விற்பனை கடந்த ஆண்டில் மட்டும் 880 வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிதியியல் ரீதியாக டெஸ்லா இன்னும் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக நீடித்தாலும், விற்பனை எண்ணிக்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமை மேற்கத்திய நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், டெஸ்லா நிறுவனம் தனது கவனத்தைத் தானாக இயங்கும் 'ரோபோடாக்ஸி' (Robotaxis) மற்றும் மனித உருவிலான ரோபோக்கள் (Humanoid Robots) தயாரிப்பில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் பிற வணிகப் பொறுப்புகள் டெஸ்லாவின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 18 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan