கெஹல்பத்தர பத்மேவின் தாய் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவின் தாயாரினால் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது மகனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவு சட்டவிரோதமானது என பத்மேவின் தாய் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கெஹல்பத்தர பத்மேவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணகைள் பூர்த்தியாகும் வரையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தவிர்ந்த வேறு இடங்களுக்கு சந்தேக நபரை மாற்றக் கூடாது என அவர் மனுவில் கோரியுள்ளார்.
இது தொடர்பில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மனு எதிர்வரும் 23ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



