மக்களுக்கு இடையூறாக வீதியில் செயற்பட்டவருக்கு கடுமையான எச்சரிக்கை
மக்களுக்கு இடையூறாக வீதியில் வைத்து வாகனத்தில் இருந்து மரக்கறிகளை இறக்கிய வியாபாரி பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
குறித்த நபர் தம்புள்ளையில் இருந்து மரக்கறிகளை கொண்டுவரும் வாகனத்தை வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சித்தங்கேணி சிவன்கோவில் வீதியில் வைத்து, மரக்கறிகளை இறக்கி தனது வியாபார செயற்பாட்டிற்காக கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
மக்களுக்கு இடையூறு
இதனால் அந்த வீதியால் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த வியாபாரியை, இனிமேல் இவ்வாறு மக்களுக்கு இடையூறாக செயற்பட கூடாது என கடுமையாக எச்சரித்துள்ளனர்.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri