சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு அந்நாட்டின் வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துவதை தவிர்த்து பேருந்துகள், படகுகள் மற்றும் டெக்சிகளை பயன்படுத்துமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
குறிப்பாக, பெர்முடா தீவுக்கு சுற்றுலா செல்வோருக்காக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகள் மிகவும் குறுகியதாக இருப்பதோடு வளைவுகளும் மிக அதிகமாக உள்ளன.
இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதோடு விபத்துக்களும் அதிகம் ஏற்படுகின்றன.
இதனால், பெரும்பாலும், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தவிர்க்குமாறும் அவ்வாறு அவற்றை வாடகைக்கு எடுத்து ஓட்டுவதாக இருந்தால் கவனமாக இருக்குமாறும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |