வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Department of Motor Vehicles vehicle imports sri lanka
By Rakesh Jun 17, 2026 10:17 PM GMT
Report

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கான 15 சதவீத வரிச்சலுகை நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் சாதாரண நடுத்தர மக்கள் வாங்க முடியாத அளவுக்கு மிக மோசமாக உயரும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உப தலைவர் அரோஷ ரொட்ரிகோ எச்சரித்துள்ளார்.

கொழும்பில்  ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தை கதிகலங்க விட்ட பெண் : அலறும் தென்னிலங்கை

ராஜபக்ச குடும்பத்தை கதிகலங்க விட்ட பெண் : அலறும் தென்னிலங்கை

புதிய வாகனங்களுக்கு நிகரான வரி

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, "கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி வெளியிடப்பட்ட 1971/10 இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, அதன் பெறுமதியில் 15 சதவீத வரிச்சலுகையை அரசு வழங்கி வருகின்றது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Warning Issued By The Vehicle Importers

புதிய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் போது, அவற்றை இறக்குமதி செய்யும் முதன்மை முகவர் நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விலைப்பட்டியல் அடிப்படையிலேயே சுங்கத் திணைக்களம் வரியைக் கணக்கிடுகின்றது.

இதனைக் கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் சுங்கத் திணைக்களத்திற்கு இல்லை. அந்த நிறுவனங்களுக்கு உற்பத்தியாளர்களிடம் இருந்து மொத்த விலைக்கே வாகனங்கள் கிடைக்கின்றன.

ஆனால், தனிநபர்களோ அல்லது ஏனைய நிறுவனங்களோ பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்யும் போது, சுங்கத் திணைக்களம் உற்பத்தியாளரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று, அதில் உள்ள அதிகபட்ச சில்லறை விலையின் அடிப்படையிலேயே வரியைக் கணக்கிடுகின்றது.

அதாவது, வெளிநாட்டு ஏலங்களில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கப்படும் பயன்படுத்திய வாகனங்களுக்கும், இலங்கையில் புதிய வாகனங்களுக்கு நிகரான வரியே விதிக்கப்படுகின்றது. இந்த அநீதியான வரிவிதிப்பால் ஏற்படும் பாரிய சுமையைத் தணிப்பதற்காகவே அன்று 15 சதவீத வரிச்சலுகை அறிமுகப்படுத்தப்பட்டது.

சந்தையில் வாகனங்களின் விலைகள்

பயன்படுத்திய வாகனங்களின் தேய்மானம் அல்லது அவற்றின் பழமையைக் கருத்திற் கொண்டு தற்போதைய வரிக் குறைப்பு எதுவும் செய்யப்படுவதில்லை.

உதாரணமாக, 10 வருடங்கள் பழமையான 'குளிரூட்டி வண்டி' ஒன்றினை வெளிநாட்டு ஏலத்தில் 30 இலட்சம் யென் மதிப்புக்கு வாங்கினாலும், அதன் புதிய வாகனத்தின் விலை 120 இலட்சம் யென்களாக இருந்தால், இலங்கை சுங்கத் திணைக்களம் புதிய வாகனத்தின் விலையான 120 இலட்சம் யென் மதிப்புக்கே வரி விதிக்கின்றது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை | Warning Issued By The Vehicle Importers

இதனால், வெளிநாட்டு ஏலத்தில் மிகக் குறைந்த விலைக்கு வாகனங்களை வாங்கினாலும், இலங்கைக்குக் கொண்டு வந்து சுங்க வரி செலுத்தி விற்கும் போது அதன் விலை பல மடங்கு உயர்ந்துவிடுகின்றது.

வெளிநாட்டு ஏல விலையுடன் ஒப்பிட்டு அரசு நியாயமான முறையில் வரியை விதித்தால், மக்களுக்கு தற்போதைய விலையை விடக் மிகக் குறைந்த விலையில் வாகனங்களை வழங்க முடியும்.

இவ்வாறானதொரு பின்னணியில், தற்போது நடைமுறையிலுள்ள 15 சதவீத வரி வரம்பு நீக்கப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விலைகள் அதிரடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வரித் திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கையில் சாதாரண நடுத்தர வர்க்க மனிதன் ஒருவனுக்குச் சொந்தமாக வாகனம் வாங்குவது என்பது முற்றிலும் இயலாத காரியமாகிவிடும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தங்கம் கடத்த முயற்சி - சிக்கிய 26 பயணிகள்

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு தங்கம் கடத்த முயற்சி - சிக்கிய 26 பயணிகள்

ராஜபக்ச குடும்பத்தை நெருங்கவே முடியாது..! சுரேஷ் சலே கைதுக்குப் பின் இருக்கும் பகீர் பின்னணி

ராஜபக்ச குடும்பத்தை நெருங்கவே முடியாது..! சுரேஷ் சலே கைதுக்குப் பின் இருக்கும் பகீர் பின்னணி

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US