இஸ்ரேல் - ஈரான் போர் தொடர்பில் போலித் தகவல்கள் பரப்பும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலில் சமகால போர் நிலைமை குறித்து தவறான தகவல்களை தவிர்க்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேலில் தற்போதைய போர் நிலைமை மற்றும் எதிர்கால சூழ்நிலைகள் குறித்து மிகவும் தவறான தகவல்களை கொண்ட குரல் பதிவுகளை பல இலங்கையர்கள் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தகவல்களை, இஸ்ரேலின் பாதுகாப்பு படைகளான PIBA மற்றும் வெளியுறவு அமைச்சு தொடர்ந்து புதுப்பித்து வருகின்றன.
ஏவுகணைத் தாக்குதல்கள்
இதனால் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதையும் நம்புவதையும் தவிர்க்குமாறு, இலங்கையர்களிடம் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பில் AI தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட பல காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
இதனை உண்மையென பல இலங்கையர்கள் தமது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri