போர் நிலை தீவிரம்! இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கைத் உயர்ஸ்தானிகர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக தகவலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு திரும்பும் இலங்கையர்கள்
நேற்றையதினம் மாத்திரம் இஸ்ரேலில் இருந்து நான்கு இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்பும் கோரிக்கையுடன் வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் விடுமுறை நாட்களாகிய இன்றும்(20) மற்றும் நாளையும்(21) தூதரகம் திறந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

எதிர்வரும் நாட்களிலும், போர் நிலை காரணமாக இஸ்ரேலில் இருந்து பெருமளவான இலங்கையர்கள் நாடு திரும்புவார்கள் என தான் நம்புவதாகவும், எனவே அவர்கள் அனைவருக்கும் உதவுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக விடுமுறை நாட்களிலும் தூதரகம் செயல்பாட்டியில் இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam