ஈரான் - இஸ்ரேல் போரினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : சுங்கம் வெளியிட்டுள்ள தகவல்
ஈரான் - இஸ்ரேல் போர் இதுவரை இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் முன்பு போலவே நாட்டிற்கு வந்து சேர்வதாக அதன் ஊடகப் பேச்சாளர் சீவலி அருகோட தெரிவித்துள்ளார்.
போரால் கப்பல் தாமதம் ஏற்படுவதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் பல்வேறு தரப்பினால் முன்வைக்கப்படும் தகவல்கள் தொடர்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களுக்கு பாதிப்பு
இதுவரையில் எவ்வித தாமதங்கள் அல்லது பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என ஊடகப் பேச்சாளர் சீவலி அருகோட குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் இராணுவ நிலைமை காரணமாக இஸ்ரேலில் பணிபுரியும் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவ மோதல் அதிகரித்தால், அந்த நாட்டில் வசிக்கும் இலங்கையர்களை அருகிலுள்ள நாடுகளுக்கு வெளியேற்றி, அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri