இஸ்ரேலின் முக்கிய கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தி அதிரடி காட்டும் ஈரான்
இஸ்ரேலின் பீர் ஷெவா நகரின் தெற்கு பகுதியில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகங்கள் தீப்பிடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதே பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் அவசர சேவை
தீயணைப்புத் துறையும் மருத்துவ குழுவும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சேவையாற்றி வருகின்றனர்.

ஆறு பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேலின் அவசர சேவை அமைப்பான மேகன் டேவிட் எடோம் (MDA) தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலால் சற்று முன்னர் வரை காயமடைந்த ஆறுபேரை வரை மீட்டுள்ளோம் என மேகன் டேவிட் எடோம் தெரிவித்துள்ளது.
இடைநிலை சிகிச்சை மையங்கள்
நாம் இதுவரை கண்டுபிடித்தவர்கள் சிறு காயங்களுடன் இருக்கின்றார்கள் என்று மேகன் டேவிட் எடோம் பேச்சாளர் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார்.

MDA வெளியிட்ட புகைப்படங்களில் கட்டிடத்தின் முன்பகுதியில் கடும் சேதம், தீப்பிடித்த கார்கள் மற்றும் காற்றில் கறுப்பு புகை எழுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அந்த டெக் பூங்காவில் மைக்ரோசொப்ட் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளதால், அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் குடியிருப்பவர்களுக்கு சிகிச்சை வழங்க MDA இடைநிலை சிகிச்சை மையங்களை அமைத்துள்ளது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri