இறந்த தாயின் ஆசையை நிறைவேற்ற வெளிநாடு சென்ற இளைஞன்! கிடைத்த திடுக்கிடும் தகவல்
மட்டக்களப்பு மாவட்டம் முனைத்தீவு கிராமத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தி பகிரதன் என்பவர் கடந்த 2025.01.07 ஆம் திகதி பெலாரஸ் எனும் நாட்டுக்கு தொழில்வாய்ப்புக்காகச் சட்டரீதியாக சென்ற நிலையில் இரு மாதங்களின் பின்னர் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியே குடும்பத்தாருக்கு கிடைத்துள்ளது.
மரணமடைந்துள்ளதாக தெரிவித்தும், அவர் தொடர்பில் இதுவரையில் எதுவித தொடர்பும் அற்றுப்போயுள்ள நிலையில அவரின் குடும்பத்தார் இன்று(25) ஊடகசந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது, எனது அம்மா மரணித்து ஒரு வருடமான காலத்தின் பின்னர் மிகுந்த மன வேதனைக்கு உட்பட்டு மிகவும் சிரமத்தின் மத்தியிலே தான் எனது தம்பி பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார் என உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
“அவர் வெளிநாடு செல்லவேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிவர்த்தி செய்து அம்மாவின் ஆத்மா ஈடேறவேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் அவர் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார்.
அவர் அங்கு சென்று மூன்று மாதமான நிலையில் கடந்த 2025.04.06 ஆம் திகதி எமக்கு ஓர் திடுக்கிடும் தகவல் ஒன்று அதிர்ச்சி ஊட்டும் தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றது.
அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்து தாமாகவே உயிரிழந்து விட்டதாக எனக்கு தகவல் கிடைத்திருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
