மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை - கணக்குகள் முடக்கப்படும் அபாயம்
இலங்கையில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பல்வேறு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இணைய முகவரிகளை பயன்படுத்தி சமூக ஊடக பயன்பாடுகள் மூலம் "Free Giveaway" என கூறி வரும் செய்திகள் அழுத்துவதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முறைப்பாடுகள்
செய்திப் பரிமாற்றம் அதிகரித்துள்ளமை தொடர்பில் தமது சங்கத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே மத்யூ குறிப்பிட்டுள்ளார்.
இந்த போலி செய்திகள் மூலம், சைபர் தாக்குதல் செய்பவர்கள் எந்த நேரத்திலும் ஒரு நபரின் முக்கியமான தனிப்பட்ட தரவை பெற முடியும். ஒரு நபரின் சமூக ஊடக கணக்குகளை அபகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறான போலியான செய்திகளை கிளிக் செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 56 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
