டிஸ்பிரின் அல்லது அஸ்பிரின் உட்கொள்வோருக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையில் டிஸ்பிரின் அல்லது அஸ்பிரின் உட்கொள்பவர்களுக்கு அவசர எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விடயம் தொடர்பில் கடுமையான அவதானத்துடன் இருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சை கட்டாயம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம். காச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்கள் பாடசாலைக்கோ அல்லது வேலைக்கோ செல்லாமல் சில நாட்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும்.
டிஸ்பிரின், அஸ்பிரின் பயன்பாடு
காய்ச்சலைக் கட்டுப்படுத்த பரசிட்டமோல் மருந்தை உட்கொள்ளலாம் என்றாலும் டிஸ்பிரின், அஸ்பிரின் அல்லது இது போன்ற மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் டிஸ்பிரின் அல்லது அஸ்பிரின் போன்ற மருந்துகளை உட்கொண்டால் அது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
இரண்டாவது நாளில் காய்ச்சல் கட்டுக்குள் வரவில்லை என்றால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
