இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கிக் கணக்கில் இருந்து 569,610.00 ரூபாய் மோசடி செய்ததற்காக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மோசடி, முறைகேடு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மோசடி, முறைகேடு மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஒரு சந்தேக நபரும், அதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த 3 சந்தேக நபர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 38 வயதுடையவர்கள், தெஹிதெனிய, முருத்தலாவ பகுதியை சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணையத்தளத்தில் தண்ணீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தை விற்பனை செய்வதற்காக நபர் ஒருவர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு
இதன்போது மோசடியாளர்கள் விற்பனையாளருக்கு முன்பணம் வழங்குவதாக கூறி, அவரது வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்ட OTP எண்ணைப் பெற்று, இந்தப் பணத்தை விற்பனையாளரிடம் இருந்து மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பில் பொலஸாரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றப் புலனாய்வுத் துறையின் வடமேல் மாகாண பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.





ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
