கனடாவில் மேற்கொள்ளப்பட்ட நூதன மோசடி குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற நூதன மோசடி தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கிறிப்டோ கரன்ஸி தொடர்பில் குறித்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவத்தில் ரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவர் 17000 டொலர்களை இழந்துள்ளதோடு, செயற்கை நுண்ணறிவு செய்தி தளங்களின் மூலம் இந்த மோசடி இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள்
குர்டிப் சஹப்ஹார்வல் என்ற நபரே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், கிறிப்டோ கரன்சி கொடுக்கல் வாங்கல்கள் மூலம் எதிர்காலத்தில் பாரிய நன்மை ஏற்படும் என்ற வகையில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கிறிப்டோ நாணயத்தில் முதலீடு செய்வதாக எண்ணி தாம் பணத்தை வைப்புச் செய்த போதிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பணம் மோசடி செய்யபப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
