முல்லைத்தீவில் பச்சிளம் குழந்தை கொலை! சிக்கிய மதபோதகரின் பின்னணி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் ஒருவர் உட்பட மூவர் நேற்று புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சந்தேகநபரான மதபோதகர் திருகோணமலையை வசிப்பிடமாக கொண்டதுடன் அவர் வாராந்தம் முல்லைத்தீவிற்கு வந்து மதபோதனை செய்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையை கொலை செய்தததாக கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணும் குறித்த மதபோதகரும் தவறான உறவில் இருந்ததாகவும் அதனாலேயே குறித்த குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மக்கள் விசனம்
மேலும், இவர் ஒரு பதிவு செய்யப்படாத போதகர் என்பது தெரியவந்துள்ளதுடன் இந்த போதகர் தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதி மக்களும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும், பிரதான சந்தேகநபரான சிசுவின் தாயிடம் இருந்தே மேற்குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் போதகர் தரப்பிலிருந்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam