பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ள மாதெனிய தோட்ட மக்கள்
வரக்காப்பொல, மாதெனிய தோட்டத்தின் தேயிலை பிரிவில் மக்கள் வாழக் கூடிய எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் பெரும் பரிதாபத்திற்குரிய நிலையில் மாதெனிய தோட்ட மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
முக்கிய பிரச்சினைகள்
குடியிருப்பில் சுவர்கள் எப்போது உடைந்து விழும் நிலை, தகரத்தில் வேயப்பட்ட கூரைகள், மிக மோசமான நிலையில் காணப்படும் குடியிருப்புக்களில் மக்கள் செய்வதறியாது வாழ்ந்து வருகின்றனர்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரதியமைச்சர் நேற்று குறித்த பகுதிக்கு சென்ற நிலையில் மலையக தமிழ் மக்களை சந்தித்து அவர்கள் வசிக்கும் இடங்களையும் நேரடியாக பார்வையிட்டதுடன் அவர்களுடைய பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், தோட்டத்து நிர்வாகத்தினருடன் உடனடியாக கலந்தாலோசித்து சில முக்கிய பிரச்சினைகளுக்கு அவ்விடத்தில் தீர்வும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







