தாஜுதீன் கொலைக்கான சாட்சியங்கள்: சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்ட எதிர்க்கட்சி முக்கியஸ்தர்
தாஜுதீன் கொலை தொடர்பில் நல்லாட்சி அரசே உண்மையான விசாரணைகளை நடத்தியது. எமது ஆட்சிக்காலத்தில் சாட்சியங்களை மாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“அரசாங்கம் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
லசந்த விக்ரமதுங்க மற்றும் எக்னெலிகொட சம்பவங்களையும் விசாரிக்க வேண்டும்.இந்தக் கொலைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் மக்களுக்கு உறுதியளித்தது. கடந்த காலத்தில், கடல் வழியாகவே இலங்கைக்கு போதைப்பொருள் வந்தது.
இப்போது இலங்கையின் பிரதான துறைமுகம் மற்றும் பிரதான விமான நிலையங்களில் போதைப்பொருள் வருகிறது. இப்போது இலங்கைக்கு போதைப்பொருள் கொள்கலன்களில் வருகிறது. நாட்டின் இளைஞர்கள் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர்.
அவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.



