கோணேச்சரத்திற்காக போராடிய வெளிநாட்டவர்! உண்மைகளை அம்பலப்படுத்திய பெண்..
திருகோணேச்சர ஆலய வளாகத்தை சூழ இருக்ககூடிய கடைகள் தொடர்பாக அதிலிருக்ககூடிய பிரச்சினைகள் தொடர்பாகவும் பல விடயங்கள் பேசப்படுகின்றன.
ஆரம்பத்திலிருந்து குறித்த கடைகள் இல்லாத நிலையில், அபிவிருத்திக்காகவும், அரசியல் காரணிகளினாலும் தற்போது பல கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், திருகோணமலையில் உள்ளவர்கள் திருகோணேச்சரத்திற்கு போவதில்லை என்று சமூக ஆர்வலர் அருஷா ஜெயராஜ் தெரிவித்தார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
1969ஆம் ஆண்டு மைக் வில்சன், ஆதர் சி கிளார்க் இருவரும் ஒரு திரைப்பட காட்சிப்படுத்தலுக்காக ஆழ்கடலில் சுழியோடி சென்ற நிலையில் அவர்களுக்கொரு லிங்கம் கிடைத்துள்ளது.
அதனை எடுத்துவந்த பிறகு மைக் வில்சன், என்பவர் அந்த லிங்கம் தொடர்பில் தீவிர ஆராய்சியில் ஈடுபட்டுள்ளார் என குறிப்பிட்டார்.
இந்தவிடயங்கள் தொடர்பில் முழுமையாக அறிய கீழுள்ள காணொளியை காண்க..



