ஈஸ்டர் விவகாரத்தில் கைது வளையத்துக்குள் இழுக்கப்படும் மூன்று இராணுவ அதிகாரிகள்! எழுந்துள்ள சிக்கல்
உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும்,அதற்கான பிரதான சூத்திரதாரி யார் என்ற கேள்வி தற்போதும் உள்ளது.
கத்தோலிக்க திருச்சபை தொடர்ச்சியான அழுத்தங்களை இந்த அரசாங்கத்திற்கும் வழங்கிக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் மிக விரைவில் மேலும் மூன்று உயர் இராணுவ முகாம்கள் கைதுசெய்யப்படுவார்கள் என நம்பப்படுகிறது.
குறிப்பாக பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெறலாம் என்ற நிலையில் ஜேவிபி தரப்பில் ஒரு சிக்கல் நிலை எழுந்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் கிழக்கு மாகான கட்டளை அதிகாரியாக செயற்பட்ட அருண ஜெயசேகரவே இப்போதைய பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் என்ற நிலையில் எழுந்துள்ள சிக்கல் நிலையின் பின்னால் இடம்பெறும் நகர்வுகள் தொடர்பில் ஆழமான ஒரு பார்வையை முன்வைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...



