புலம்பெயர் நாடுகளிலிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு இலங்கையில் புதிய சிக்கல்
புலம்பெயர்நாடுகளிலிருந்து உண்டியல் மூலமாக வருகின்ற பணம் முழுமையாக வங்கிக்குள் வரும் போது அதற்கான கேள்விகள் கேட்கப்பட முடியுமென்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எம் .கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தியாவை போல அரசாங்கம் எல்லாவற்றையும் டிஜிட்டல் மயப்படுத்த முனைகின்றது.
அந்த முறையை பயன்படுத்துவதன் மூலம் பணப்புழக்கம் குறைந்து விடுகின்றது, அரசாங்கத்திற்கும் தேவையான தகவல்கள் கிடைத்துவிடுகின்றன.
இந்த விடயங்கள் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், காலப்போக்கில் பழகிவிடும், அதனை தொடர்ந்து அரசாங்கம் வரவு செலவுகளை கண்காணிக்கும் நிலை உருவாகும் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...



