விஜய் தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை: அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்த நீதிபதி
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு கோரிய வழக்கில் அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்தபோது
இதுகுறித்து மேலும் நீதிபதி கூறியதாவது, கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை. பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் சம்பவம் நடந்ததும் தொண்டர்களையும், அவர்களை பின் தொடர்பவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்து விட்டனர்.
கரூர் துயரத்தில் அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்தபோது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மொத்தமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
ஒரு கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா.
மேலும் விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் விஜயின் பரப்புரை வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை? குறித்த பரப்புரையால் ஆன சேதங்களை கணக்கிட்டீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



