தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு: மனோ கணேசனின் குழப்பகரமான கருத்து
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு தான் எதிரானவனல்ல என தனக்கு தனிப்பட்ட முறையிலும் சுமந்திரனுக்கும் ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்கவும் தெரிவித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
'மாகாண சபைத் தேர்தலை 2025 இல் நடத்தப்பட வேண்டியது ஏன்?' என்ற தொனிப் பொருளில் பெப்ரல் அமைப்பினால் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
“ஜே.வி.பியின் கொள்கைக்கிணங்க அதிகாரப் பகிர்வுக்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, தமிழ் மக்களின் பிரச்சினைக்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபையின் மூலம் அதிகாரப் பரவலாக்கலுக்கு தான் இப்போது எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன்.
அதிகாரப் பரவலாக்கம்
ஆனால் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரும் அனைவரும் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலுக்கு நேர்மையான சிந்தனை கொண்டவர்கள் அல்லர் என்பது உண்மைக்கு புறம்பானவை.
மாகாண சபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நான் கேட்கும் கோரிக்கை என்வென்றால் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் என்பதாகும்.
13ஆம் திருத்தம் என்பது 1987இல் இலங்கையின் அரசியலமைப்பில் செய்யப்பட்ட ஒரு திருத்தமாகும், இது மாகாண சபைகளை உருவாக்கும் நோக்கில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கும் அதிகாரப் பரவலாக்கத்தை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அதிகாரங்களை பரவலாக்கவும் இது கொண்டுவரப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



