உக்ரைன் படைகளின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான ரஸ்ய போர்க்கப்பல்: ரஸ்யாவும் உறுதிப்படுத்தியது (Video)
உக்ரைன் போரின் ஆரம்பத்தில் உக்ரைனிய துருப்புக்களை சரணடையுமாறு கோரியபோது அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்களை சிறைபிடித்த, ரஸ்ய போர்க்கப்பல், உக்ரைனிய ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதில் இருந்து 510 பேரை மீட்பதற்கு ரஸ்ய முயற்சித்து வருவதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் மொஸ்க்வா என்ற கப்பலில் இருந்து வெடிமருந்துகள் வெடித்து சிதறியதாக ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
மொஸ்க்வாவில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக, அனைத்து பணியாளர்களும் முன்னதாகவே வெளியேற்றப்பட்டதாக ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் விளைவாகவே அதில் இருந்த வெடிமருந்துகள் வெடித்ததாக ரஸ்யா கூறியுள்ளது.
இதன்போது கப்பல் கடுமையாக சேதமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள ரஸ்யா தீவிபத்துக்கான காரணத்தை கூறவில்லை.
மொஸ்க்வா ஏவுகணை கப்பல் 1980 களின் முற்பகுதியில் சோவியத் ஒன்றியத்தில் கட்டப்பட்டது.
இது உண்மையில் உக்ரைனின் தெற்கு நகரமான மைகோலேவில் கட்டப்பட்டது,
இந்த நகரம் சமீபத்திய நாட்களில் ரஸ்ய துருப்புக்களால் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களுக்கு உள்ளானது
186 மீ நீளமுள்ள மொஸ்க்வா கப்பல் சோவியத் கடற்படையின்; 1164 அட்லாண்ட் வகுப்பின் முன்னணிக் கப்பலாக இருந்தது.
இது ஆரம்பத்தில் ஸ்லாவா என்று அழைக்கப்பட்டது, ஆனால் பின்னர் மொஸ்கவா மறுபெயரிடப்பட்டது.
போர்க்கப்பலின் முக்கிய ஆயுதங்களாக பி 1000 வோல்கன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்தன.