தேசிய படைவீரர்கள் நினைவுக் கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது
படைவீரர் கொண்டாட்ட மாதத்தை பிரகடனப்படுத்தும் வகையில் தேசிய படைவீரர் கொடியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) அணிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (06.05.2024) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற அதிகாரி நிஷாந்த மானகேவினால் ஜனாதிபதிக்கு படைவீரர் கொடி வழங்கப்பட்டது.
படைவீரர் நினைவு மாதம்
மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக தமது உயிர்களை தியாகம் செய்த படைவீரர்களை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு மே மாதமும் 'படைவீரர் நினைவு மாதமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதல்வாரத்தில் முப்படைகளின் தளபதியால் ஜனாதிபதிக்கு தேசிய படைவீரர் கொடி அணிவிக்கப்படுவதன் மூலம் படைவீரர்களின் மாதம் ஆரம்பமாகிறது.
இந்த நிகழ்வில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர், ரணவிரு சேவா அதிகாரசபை உப தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
