யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது
புதிய இணைப்பு
யாழ். தெல்லிப்பழையில்(Jaffna) உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
அது கொலையா? தற்கொலையா? என ஆராயப்பட்ட நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் 16 வயதுடைய மகன் மீது சந்தேகம் வெளியிட்டிருந்தார்.

கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையான மேற்படி மகன், தாயாரின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் தலைமறைவான நிலையில், இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடம் விசாரணைகள் இடம்பெறுவதோடு போதைப்பொருள் பாவனை தொடர்பான பரிசோதனைக்கும் அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்தி - ராகேஸ்
முதலாம் இணைப்பு
யாழில் அண்மையில் பதிவான சம்பவம் ஒன்றையடுத்து சிறுவர்களுக்கு திறன்பேசிகளை (Smartphone) வழங்குவது தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, அவர்களுக்கு திறன்பேசிகளை வழங்குவதால் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலமொன்று நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது.

இரத்தக் கறையில் வாசகங்கள்
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின், 16 வயதுடைய மகன் காணாமல் போயுள்ள நிலையில், அவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகன், தொலைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் 16 வயதுடைய குறித்த சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் எனவும், அவரது அறையில் சில வாசகங்கள் இரத்தக் கறையால் எழுதப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த 16 வயது சிறுவன், தனது தாயை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனவே, சிறுவர்களுக்கு தொலைபேசிகளை வழங்குவது தொடர்பாக பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam