இலங்கையின் பிரபல நிதி நிறுவனம் ஒன்றின் தலைமையகத்தில் ஏற்பட்ட பெரும் குழப்பம்! வெளியான காணொளி
பிரபல நிதி நிறுவமொன்றுக்கு எதிராக அதன் வாடிக்கையாளர் ஒருவர் கடும் அதிருப்தி வெளியிடும் காணொளி அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனமொன்றின் குத்தகை தொகையை செலுத்திய வாடிக்கையாளர் வாகனத்தின் சாவியை கோரியுள்ளார்.
எனினும் நிறுவனத்தின் அதிகாரிகள் குறித்த வாடிக்கையாளரையும் அவருடன் வந்தவரையும் கடுந்தொனியில் பேசுகின்றார்.
வாய்த்தர்க்கம் உக்கிரமடைந்து கைகலப்பாக மாறும் அளவிற்கு இந்த முரண்பாட்டு நிலை அதிகரித்திருந்தது.
வாகனத்தின் சாவியை எப்போது தர முடியும் என்பதே எங்களது கேள்வி, தர முடிந்த தினத்தை கூறினால் அதனை பெற்றுக்கொள்வோம் என வாடிக்கையாளர் கூறுகின்றார்.
எங்களை அலைய விட வேண்டாம் நாமும் வேலை செய்கின்றோம் எப்போது சாவியை வழங்க முடியும் என்பதனை ஆவணமொன்றின் ஊடாக வழங்கினால் அன்று வந்து பெற்றுக்கொள்ளத் தயார் என குறிப்பிடுகின்றார்.
எனினும், தலைமைக் காரியாலயத்தில் இருந்த எவரும் இதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டு உரிய பதிலளிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வாகன சாவியை கொடுக்க முடியாதவர்கள் மோசமாக தம்மை திட்டுவதாக குறித்த வாடிக்கையாளர் தெரிவிக்கின்றார். காணொளி பதிவிடுவதனை நிறுவன ஊழியர்கள் தடுக்க முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |