கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா தொடர்பில் பரபரப்பை ஏற்படுத்திய நபருக்கு எதிராக நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் பிரிவில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர் மற்றும் சம்பவத்தை ஆவணப்படுத்திய அதிகாரிகள் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் (Tiran Alies)தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் முதலாம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞனே விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சட்டத்தரணியான சந்தருவன் குமாரசிங்க என்ற குறித்த இளைஞன் இன்று காலை விமான நிலைய பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குடிவரவு குடியகல்வு
இதேவேளை, விமான நிலையத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை பதிவு செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூவரின் வாக்குமூலங்களை கட்டுநாயக்க பொலிஸார் நேற்று (05) மாலை பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், தாம் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டமைக்கு அதிருப்தி வெளியிட்ட அவர், தேசிய சொத்துக்கள் விற்கப்படும் போது குரல் எழுப்பும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், தனது மனைவியின் வருகைக்கான விசா ரத்து செய்யப்பட்டதாகக் கூறி இந்திய விசா வழங்கும் அதிகாரிகளைக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒன்லைன் விசாவை இந்திய அதிகாரிகள் வழங்கியமைால் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் இலங்கை இளைஞன் கடும் கோபமாக பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பேச்சப்பட்டமைப் குறிப்பிட்டத்தக்கது.
மேலதிக தகவல் - சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 9 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
