கிரிக்கெட் உலக கோப்பை : பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாத அச்சுறுத்தல்
டி20 உலகக் கோப்பை (ICC Men's T20 World Cup) நடைபெறவுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு (west indies) தீவிரவாத தாக்குதல் மிரட்டல் வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அச்சுறுத்தல் வடக்கு பாகிஸ்தானில் இருந்து வந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நடத்துக்கின்றன.
டி20 உலகக் கோப்பை 2024 போட்டியானது வருகின்ற ஜூன் 1ஆம் திகதி தொடங்குகிறது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை வெஸ்ட் இண்டீஸ் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
முக்கிய நிகழ்வுகளை குறிவைத்து தாக்குதல்
குறிப்பாக டி20 உலகக் கோப்பையின்போது மேற்கிந்திய தீவுகளின் நாடுகளை குறிவைத்து தாக்குவோம் என்று வடக்கு பாகிஸ்தானில் இருக்கும் ஐஎஸ்- கொராசனியம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024 டி20 உலகக் கோப்பை உட்பட உலகின் முக்கிய நிகழ்வுகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் ட்ராபி (Champions trophy) தொடரில் இந்திய அணி விளையாடுவது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
