பொருளாதாரத்தில் வேகமாக வளரும் இலங்கை: இராஜாங்க அமைச்சர் தகவல்
அரசாங்கத்தின் முயற்சியினால் நாடு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றது என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S. Viyalendiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டம் எருவில் பிறீடம் விளையாட்டுக் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் நேற்று (05.05.2024) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“அரசாங்கமும், ஜனாதிபதியும் இன்னும் பலரும் கூட்டாக எடுத்துக் கொண்ட கடின உழைப்பால் தற்போது நாடு படிப்படியாக பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம்
இவ்வாறு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த பல நாடுகள், 50 வருடகாலமாகவும் உலகத்தில் எழவில்லை. ஐரோப்பிய நாடுகளில் கூட விலைவாசிகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட கோவிட் தொற்றுக்குப் பின்னர் பணவீக்கம் பாரிய பிரச்சனையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


யார் இந்த கிரிஜா? பிரபல நடிகருடன் நெருக்கமான காட்சிகள், திடீர் ட்ரெண்டிங், முழு விவரம்... Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam