மட்டக்களப்பில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்ட ஆசிரியர் எச்சரிக்கப்பட்டு விடுவிப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக சமூக ஊடகங்களில் குரல்பதிவிட்ட ஆசிரியரே இன்று (06) மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு வரவழகை்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்.பண்டார தெரிவித்துள்ளார்.
குரல்பதிவு
“மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலையில் தரம் 5இல் கல்வி கற்றுவரும் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (03) பாடசாலை முடிந்து பிறபகல் 2.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் பெற்றோர் வருவதற்காக காத்திருந்தபோது அங்கு இளைஞன் ஒருவர் வந்துள்ளார்.
இந்நிலையில் பெற்றோரதும் சிறுமியினதும் பெயரை கேட்டு பாடசாலையில் அனைவருக்கும் ஊசி பேடுவதாகவும் உங்களுக்கு ஊசி போடவில்லை என தெரிவித்து சிறுமிக்கு ஊசி ஒன்றை ஏற்றிவிட்டு இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான் அதனால் சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே ஏனைய பிள்ளைகள் அவதானம்" என ஆசிரியர் ஒருவர் குரல்பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டதையடுத்து இது தொடர்பாக மட்டு தலைமையக சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி விவேகானந்தன் தலைமையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் விசாரணைகளில் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
எனினும், சிறுமி தெரிவித்தமை பொய் என தெரியாது அதனை ஆசிரியருக்கு தந்தையார் தெரிவித்ததாகவும் அதனை தனியார் கல்வி நிலைய ஆசிரியர் குரல் பதிவிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து சமூக ஊடகங்களில் குரல் பதிவிட்ட ஆசிரியரை பொலிஸார் வரவழைத்து வாக்கு மூலம் பெறப்பட்டு அவரை எச்சரித்து விடுவித்துள்ளதுடன் சிறுமிக்கு வைத்திய பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இவ்வாறு உறுதிப்படுத்தப்படாமல் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பொதுமக்களை பீதியடைச் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பரிசோதகர் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
