ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி லண்டனிலிருந்து நடை பயணம்
ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி, பிரித்தானியாவின் லண்டனிலிருந்து இந்தியா வரை முன்னெடுக்கப்படவுள்ள மனிதநேய நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று(26.09.2026) யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்றது.
காந்திய தேசத்திடம் ஈழத் தமிழர்களுக்கான நீதியை வலியுறுத்தி பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், இந்த மனிதநேய நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வும் இடம்பெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து
புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் உணர்வாளரான சிவசுப்பிரமணியம் லோகேஸ்வரன், தனிப்பட்ட முயற்சியாகவும் தனது சுய விருப்பத்தின் அடிப்படையிலும் இந்த நடைப்பயணத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1. இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த பெருமளவான மக்களுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும்.
2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுடன் கூடிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
3. தமிழர் தாயகப் பகுதிகளில் கண்டறியப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் பொறுப்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடைப்பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வு
திட்டமிடப்பட்டுள்ள நடைப்பயணம், எதிர்வரும் 26ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் அமைந்துள்ள முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சிலையிலிருந்து, அகிம்சையின் அடையாளமாகக் கருதப்படும் இந்தியாவின் மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடம் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவசுப்பிரமணியம் லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[MJKUK7F
ஒரு இனத்தின் விடுதலைக்காக நீண்டகாலம் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலாவின் நினைவிடத்திலிருந்து, அகிம்சைப் போராட்டத்தின் முக்கிய அடையாளமான மகாத்மா காந்தியின் சிலை வரையான இந்த நடைப்பயணம், ஈழத் தமிழர்களுக்கான நீதிக் கோரிக்கையை சர்வதேச கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நடைப்பயணத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், தியாகி திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொன் மாஸ்டர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் பங்கேற்பு மற்றும் ஆசீர்வாதத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு ஆயுத விற்பனை - இறுதிப் போரில் எஞ்சிய வெடிப்பொருட்களுக்கு என்ன நடந்தது...!


