ஐ.நா மனித உரிமைகள் தலைவராக வோல்கர் டர்க் தேர்வு
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்த சர்வதேச வழக்கறிஞரான வோல்கர் டர்க் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1993-ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பதவி உருவாக்கப்பட்ட பிறகு, தொடர்ச்சியாக இரண்டாவது முழு பதவிக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் நபர் என்ற பெருமையை வோல்கர் டர்க் பெற்றுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் சமர்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில் ஐ.நா பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
கோரிக்கை
இந்த வாக்கெடுப்பில் 144 நாடுகள் வோல்கர் டர்க்கிற்கு ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 13 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

வாக்கெடுப்பை அடுத்த வாரம் வரை ஒத்திவைக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியும், அவரது பதவிக் காலத்தை இந்த ஆண்டின் இறுதி வரை மட்டுமே நீட்டிக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையும் பொதுச்சபையால் நிராகரிக்கப்பட்டன.
மனித உரிமைகள் ஆணையர் என்ற முறையில், உறுப்பு நாடுகளின் மனித உரிமை மீறல்களைப் பகிரங்கமாக விமர்சித்ததே இவரது தேர்வுக்கு வல்லரசு நாடுகள் எதிர்ப்புகளைப் பதிவு செய்ய முக்கியக் காரணமாக அமைந்தது.
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri