இந்தோனேசியாவில் மீண்டும் வெடித்து சிதறிய எரிமலை : விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின்(Indonesia) வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுனாமி எச்சரிக்கை
எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எரிமலை வெடித்ததால். அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிக அச்சமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறுவது இந்த மாதத்தில் இது 2வது முறையாகும். முன்னதாக, கடந்த 16ஆம் திகதி ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதறியது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam