எதிரி நாட்டு அணி அணிவகுத்து சென்றபோது ஆழ்ந்த நித்திரையில் இருந்த உலக தலைவர்(காணொளி)
யுக்ரெய்ன் நாட்டுடனான போர் ஆயத்தங்களின்போது நித்திரை கொள்ளாத ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீனாவில் ஆரம்பமாகியுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், எதிரி நாடான யுக்ரைனின் அணி அணிவகுத்து சென்றபோது நித்திரையில் ஆழ்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஆரம்பமாகியுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் 24-ம் திகதி வரை நடைபெறவுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதனை முன்னிட்டு குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு சீன தலைநகர் பெய்ஜிங்கில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
#TeamChina, go! pic.twitter.com/9PjTr7If35
— Hua Chunying 华春莹 (@SpokespersonCHN) February 4, 2022
இந்தநிலையில், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப விழாவின் போது, யுக்ரைன் அணி மைதானத்தின் வழியாக அணிவகுப்பை நடத்தியபோது, ரஷ்ய ஜனாதிபதி ஆழ்ந்த உறங்கத்தில் இருந்துள்ளமையை காணொளிக் காட்சிகளில் காணக்கூடியதாக உள்ளது.
யுக்ரெய்ன் விளையாட்டு வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அவர்களின் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது, விளாடிமிர் புட்டின் தனது இருக்கையில் கண்களை மூடிய நிலையில் இருந்ததை காணமுடிந்தது.
எனினும் தமது நாடான ரஷ்யாவின் ஒலிம்பிக் குழு மைதானத்திற்குள் பிரவேசித்த நேரத்தில், புட்டின் விழித்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
Did Putin fall asleep during the opening ceremony of the Olympics? pic.twitter.com/Yu7NHbaZwi
— The Post Millennial (@TPostMillennial) February 4, 2022



