எந்த கொம்பனாலும் தமிழீழத்தை பெற்றுக் கொடுக்க முடியாது! வியாழேந்திரன் பகிரங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போன தமிழீழத்தை எந்த கொம்பனாலும் இனி பெற்றுக் கொடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் (Viyalendran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) செங்கலடி பொதுச் சந்தையில் அமைக்கப்பட உள்ள கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வில் இன்றைய தினம் (13.05.2024) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இலங்கையின் அரசியல் வகைகளில் ஒன்றான எதிர்ப்பு அரசியலுக்கான காலம் 2009 முள்ளிவாய்க்காலுடன் நிறைவுக்கு வந்துவிட்டது.
இராஜதந்திர அரசியல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போன தமிழீழத்தை இனி எந்த கொம்பன் வந்தாலும் பெற்றுக் கொள்ள முடியாது.
தசாப்தங்களாக தமிழர்கள் எதிர்ப்பு அரசியல் செய்து அதனால் ஏற்பட்ட நன்மை தீமைகளை கணக்கிட்டுப் பார்த்தால் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்று தெரியும்” என தெரிவித்துள்ளார்.
என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு தற்போது தேவை இராஜதந்திர அரசியலே ஆகும். அதனையே நான் தற்போது செய்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
செய்தி - நிலவன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |