தனது சகோதரரின் சொத்து விபரங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆளுங்கட்சி எம்.பியின் சகோதரி கேள்வி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்கவின் சொத்து விபரங்கள் தொடர்பில் அவரது சகோதரி கேள்வி எழுப்பியுள்ளார்.
விதுர வெளிப்படுத்தியுள்ள சொத்து விபரங்களின் உண்மைத்தன்மை குறித்தே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2010ம் மற்றும் 2015ம் ஆண்டுகளில் விதுர விக்ரமநாயக்கவிற்கு கிடைக்கப் பெற்ற தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து பெற்றுக் கொண்ட பணம் பற்றிய தகவல்கள் சொத்து விபரங்களில் உள்ளடக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு வாகன அனுமதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படவில்லை என்றால் அந்த இரண்டு வாகனங்களும் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்து விபரங்களை மட்டும் வெளிப்படுத்தாது அதனை கணக்காய்விற்கு உட்படுத்தவும் இணங்க வேண்டுமென விதுரவின் இளைய சகோதரி முகநூல் வழியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
