வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மகிந்த விஜயம்!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின்(Lohan Ratwatte) உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama)ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.
குறித்த விஜயம் நேற்று (01.11.2024) இடம்பெற்றுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியின் மிரிஹான வீட்டில் சொகுசு கார் ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவர், கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியல் உத்தரவு
இந்நிலையில், அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உடல் நலக்குறைவு காரணமாக நீதிமன்றில் மருத்துவ தேவைகளை முன்வைத்து பெறப்பட்ட உத்தரவின் மூலம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட லொஹான் ரத்வத்த தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam