முக்கிய துறைகளில் இந்தியாவின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் ஜனாதிபதி
இலங்கையில் (Sri Lanka) மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையின் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (01) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
மின்சாரம், எரிசக்தி துறை மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறையில் இந்தியாவின் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஜனாதிபதி பேச்சுவார்ததை நடாத்தியுள்ளார்.
கடற்றொழில் பிரச்சினைகள்
இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களின் தேவைகளுக்கு மதிப்பளித்து, ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நீண்ட கால தீர்வின் முக்கியத்துவத்தை இரண்டு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், வடக்குக் கடலில் நடந்து வரும் கடற்றொழில் பிரச்சினைகளையும் அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri