வெளிநாட்டவர்கள் பலரை நாடு கடத்த தயாராகும் இலங்கை அரசாங்கம்
இலங்கையில் பல்வேறு காரணங்களுக்காக விசா இன்றி தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினரையும் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அடையாளம் காணும் நபர்களை கைது செய்து நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ள நபர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிபுரியும் வெளிநாட்டவர்கள்
இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, ரஷ்யா, மியான்மர், நைஜீரியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து விசா இன்றி பணிபுரியும் வெளிநாட்டவர்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் ஹோட்டல்களை நடத்தும் வெளிநாட்டவர்கள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri