இலங்கையின் வெளிநாட்டுக்கடன் தொகை விபரங்கள் வெளியாகியுள்ளன

Sivaa Mayuri
in பொருளாதாரம்Report this article
2024ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என இலங்கையின் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட வருடத்தின் மத்திய நிதி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரையிலான மொத்தக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் 503.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதில் 275.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அசலை திருப்பிச் செலுத்துவதாகவும், மீதி 227.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள், வட்டிச் செலுத்தலாகவும் இருந்தது.
நிதியமைச்சின் அறிக்கை
முன்னதாக, வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவது 2022 ஏப்ரல் 12ஆம் திகதி முதல் இடைக்காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, 5,670 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,527 மில்லியன் டொலர்கள் வட்டி என்பன 2021 ஜூன் இறுதிவரையில் செலுத்தப்படாத கடன் சேவையாக குவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் அறிக்கை கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |