முன்னாள் அமைச்சரிடம் இருந்து போலி இலக்கத்தகட்டை கொண்ட மற்றுமொரு வாகனம் மீட்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் போலி இலக்கத் வெள்ளை நிற 'SUV' வாகனம் ஒன்றே தெல்தெனிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகத்தகவல்களின் படி, இரகசியத் தகவலின் அடிப்படையில், ஆளில்லாத வீடொன்றின் வாகனத்தரிப்பிடத்தில் இருந்து இந்த வாகனம் மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த மிட்சுபிசி ஜீப் ஆனது 'KN 5556' என்ற போலி இலக்கத் தகட்டை கொண்டுள்ளது. இது, கண்டி பிலவல பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருக்கு சொந்தமான சிவப்பு நிற பிராடோ வாகனத்தின் இலக்கத் தகடு என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
விளக்கமறியல்
ஏற்கனவே, மிரிஹனவில் உள்ள அவரது மனைவிக்கு சொந்தமான வீட்டில் இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அமைச்சர் லொஹான் ரத்வத்த, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 15 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
