அரசியல் அச்சத்தில் ரணில் - திரைமறைவில் அரங்கேற்றப்படும் சதி நடவடிக்கைகள்
சமகால அரசியல் நெருக்கடி நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடப் போவதாகவும் அநுர அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஈஸ்டர் தாக்குதல்
எனினும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடாத நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில ஊடக சந்திப்பின் மூலம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.

அவரின் ஊடக சந்திப்பு குறித்து அதிகம் எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தாலும், அவரின் தகவல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், புதியதாகவும் எதுவும் இருக்கவில்லை.
இந்நிலையில் அவரின் முயற்சி படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது அவர் அமைதியாகி உள்ளார்.
இந்நிலையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
ஏற்கனவே பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, முழுமையாக அழிவடையும் நிலையில் உள்ளது.
அநுர அலை
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது அந்தக் கட்சி எந்தவொரு உறுப்பினர்களையும் பெற்றிருக்கவில்லை. எனினும் அந்தக் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஊடாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகி இருந்தார்.

இந்நிலையில் நாட்டில் அநுர அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தனது அரசியல் இருப்பை தக்க வைக்க ரணில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்.
அதனொரு அங்கமாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் உண்மையை அம்பலப்படுத்தவுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரசாரம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் முதற்கட்டம் இன்று ஆரம்பமாகிறது. இந்நிலையில் அதனை குறித்து ரணில் மற்றும் சஜித் தரப்பு தமது அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri