சமூக நலத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் ஜனாதிபதி நடத்திய கலந்துரையாடல்
சமூக நலத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் நேற்று (01) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் அரிசி விலையை ஸ்திரப்படுத்தல், அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்டகால தீர்வு காணல் மற்றும் நெல் சேமிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவம் என்பன வலியுறுத்தப்பட்டுள்ளன.
முக்கிய விடயங்கள்
மேலும், எதிர்வரும் பாடசாலை பருவத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான நிவாரண விநியோகத் திட்டத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான திட்டங்கள் மற்றும் விவசாயத்துக்கான உர விநியோகம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Dialog Axiata PLC இன் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, Millennium IT ESP இன் பிரதான தொழில்நுட்ப அதிகாரி மகேஸ் விஜேநாயக்க மற்றும் துறைசார் நிபுணர்கள் குழுவினரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.





மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
