கோலி குறித்து நெகிழ்ச்சி பதிவு: சாதனைக்கு நெதர்லாந்து வீரர் வாழ்த்து
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சாதனை சதம் கடந்த கோலியை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக நெதர்லாந்து வீரர் வெஸ்லி பர்ரேசி கூறியுள்ளார்.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி கொல்கத்தாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49வது சதத்தை கடந்து சாதனைப்படைத்துள்ளார்.
குறித்த சாதனையை படைத்த அவருக்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் வெளியிடப்படுகின்றன.
கோலியை பாராட்டி ட்விட்டர் பதிவு
அதேபோல் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி அனைத்திலும் வென்றுள்ளது.

இந்நிலையில்,தனது கடைசி போட்டியில் இந்திய அணி 12ஆம் திகதி நெதர்லாந்தை சந்திக்கிறது.
நெதர்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் வெஸ்லி பர்ரேசி சாதனை படைத்த விராட் கோலியை பாராட்டி ட்விட்டர் பதிவென்றை செய்துள்ளார்.
I am looking forward to shaking this man's hand next week and telling him I will forever remember your name ? #legendofthegame #pureclass #49 pic.twitter.com/OvzSzetE7n
— Wesley Barresi (@Pepe_Barezi) November 5, 2023
அவரது பதிவில், ''அடுத்த வாரம் இந்த மனிதருக்கு கைகுலுக்கி, உங்கள் பெயரை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என கூற ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam