BCCI க்கு விராட் கோலி விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை..!
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தனது பங்கேற்பு குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவுக்கு அதிரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
"நான் தகுதியற்றவன் என்றோ அல்லது அணிக்குத் தேவையில்லை என்றோ தோன்றினால், அதை முதல் நாளே என்னிடம் நேரடியாகச் சொல்லிவிடுங்கள்.
அதை விடுத்து, எனது திறமையையும் மதிப்பையும் நான் இன்னும் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அந்த இடத்தில் இருப்பதற்கு நான் தயாராக இல்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருநாள் போட்டிகள்
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட கோலி (37 வயது), தற்போது 50 ஓவர் (ODI) போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
]
போட்டிகள் குறைவாக இருப்பதால் அவரது ஃபார்ம் குறித்து தேர்வுக்குழு தொடர் விவாதங்களை நடத்தி வருகிறது.
தனது தீவிரமான வாழ்வியல் முறை காரணமாக 40 ஓவர்கள் களத்தில் ஓடி ஆட தம்மால் முடியும் எனத் தெரிவித்துள்ள கோலி, தன்னை அணியில் இருந்து நீக்குவதற்கு 'உடற்தகுதி' அல்லது 'பணிச்சுமை' (Workload) என்ற காரணங்களை பிசிசிஐ கூற முடியாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் 65.1 சராசரியுடன் 651 ரன்களைக் குவித்துள்ள கோலி, இந்த ஆண்டும் ஏற்கனவே ஒரு சதம் அடித்து அசத்தியுள்ளார்.
2027 உலகக்கோப்பை
சமீபகாலமாக மூத்த வீரர்களை ஒவ்வொரு தொடராகப் பார்த்து தேர்வு செய்யும் பாணியை பிசிசிஐ கையாண்டு வருகிறது.
ஆனால், கோலி தனக்கு 2027 உலகக்கோப்பை வரை உறுதியான இடம் வழங்கப்பட வேண்டும் என்பதை மறைமுகமாகக் கேட்டுள்ளார்.

கடந்த காலங்களில் வாரிய அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதல்களை மனதில் வைத்து, "நிலைமை சிக்கலானால் எனது சொந்த நிபந்தனைகளின்படி கிரிக்கெட்டை விட்டு வெளியேறவும் நான் தயங்கமாட்டேன்" என்ற தொனியில் கோலி பேசியுள்ளார்.
முடிவு இப்போது பிசிசிஐ-யின் வசம் உள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த துடுப்பாட்டவீரருக்கு அவர்கள் தகுந்த விளக்கத்தை அளிப்பார்களா அல்லது இந்த விவகாரம் மேலும் முற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.''