'மே 09' வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
காலிமுகத்திடல் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் கடந்த மே 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாளாந்தம், பலர் கைது செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இன்று திங்கட்கிழமை (22) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடரும் கைது நடவடிக்கை
இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை 31 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பொலிஸாரின் கூற்றுப்படி, சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3,553 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,255 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக செய்தி-ராகேஷ்




